பதிவு செய்த நாள்
20
நவ
2019
03:11
இத்தலம் தமிழக சபரிமலையாக விளங்குகிறது. சபரிமலை அமைப்பு போன்றே கட்டப்பட்ட கோயில் இது. இரண்டு அடுக்காக அமைந்த கோயிலின் மேல் பகுதியில் ஐயப்பன், பாலகனாக இருக்கிறார். பஞ்சலோகத்தால் ஆன இவரது சிலை கேரள மாநிலத்தில் செய்யப்பட்டது. சன்னதி முன் 18 படிகளும் அருகில் புலி வாகனமும் உள்ளது. படி அருகில் கடுத்த சாமி, கருப்பண்ண சாமி, கருப்பாயி காவல் தெய்வங்களாக உள்ளனர். சன்னதியின் வலப்புறம் கன்னிமூல கணபதி, இடப்புறம் மாளிகைப்புறத்தம்மன் சன்னதிகள் உள்ளன.
சபரிமலையில் நடை திறக்கும் நாட்களிலேயே இங்கும் பூஜை நடக்கிறது. அங்கு ஆறாட்டு உற்ஸவத்திற்கு சுவாமி செல்வது போலவே இங்கும் கையில் வில், அம்புடன் இருக்கிறார். கோயில் திறப்பின் போது 18 படிகள் மீதும் கவசம் வைத்து பட்டுத்துணி போர்த்தி, உன்னியப்பம், அரவணை படைத்து மலர் அலங்காரத்துடன் பூஜை செய்கின்றனர். மகரஜோதியன்று திருவாபரண பெட்டி ஊர்வலம், ஜோதி தரிசனம், சித்திரை பிறப்பன்று விஷு கனி தரிசனமும் உண்டு. ஐயப்பன் தவநிலையில் இருப்பவர் என்பதால் நடை அடைக்கும் போது விபூதி அலங்காரம் செய்து, இடக்கையில் தண்டத்தை வைத்து, ஒரு தீபம் மட்டும் ஏற்றுகின்றனர். மீண்டும் நடை திறக்கும் போது அந்த விபூதியை பிரசாதமாக தருகின்றனர். பாலகன், பூரணையுடன் குடும்பஸ்தன், இருகால்களையும் மடக்கி குத்துக்காலிட்டு யோக நிலை என மூன்று கோலத்தில் ஐயப்பனை இங்கு காணலாம். பத்து கைகளுடன் உள்ள தசபுஜ ஐயப்பன் சிலையும் உள்ளது. இவர் கைகளில் சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, திரிசூலம். சுத்தி ஏந்தியுள்ளார். ஐயப்பனை மணம் புரிய விரும்பிய மஞ்சள் மாதாவுக்கு இங்கு சன்னதி உள்ளது. திருமணத் தடையுள்ள பெண்கள், மஞ்சள் பொடி தூவி வழிபடுகின்றனர். குழந்தைப்பேறு கிடைக்க ஐயப்பன் கழுத்தில் மணி கட்டி வழிபடுகின்றனர்.
* எப்படி செல்வது?
ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தேவிபட்டினம் செல்லும் வழியில் ஒரு கி.மீ