பதிவு செய்த நாள்
20
நவ
2019
03:11
நவ.15, ஐப்பசி 29: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி விரதம், மாயவரம் கவுரிமாயூர நாதர் தேர், இந்தளூர் பரிமள ரங்கநாதர் வெண்ணெய் தாழிசேவை, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம், உத்திரமாயூரம் வள்ளலார் சன்னதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு, பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் சிறப்பு அபிஷேகம்
நவ.16, ஐப்பசி 30: மாயவரம் கவுரிமாயூர நாதர் கடைமுக தீர்த்தம், இந்தளூர் பரிமள ரங்கநாதர் தேர், ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை
நவ.17, கார்த்திகை 1: விஷ்ணுபதி புண்யகாலம், நெல்லை நெல்லையப்பர் கோயிலில் திருவனந்தல் ஆரம்பம், மாயவரம் முடவன் முழுக்கு, ஐயப்ப பக்தர்கள் மாலையணிதல், இந்தளூர் பரிமள ரங்கநாதர் சப்தாவர்ணம், பத்ராசலம் ராமர், திருவள்ளூர் வீரராகவர், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, கரிநாள்
நவ.18, கார்த்திகை 2: எல்லா சிவத் தலங்களில் 1,008 சங்காபிஷேகம், நெல்லை நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி, திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு, அவிநாசி அவிநாசி லிங்கேஸ்வரர் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், கரிநாள்
நவ.19, கார்த்திகை 3: சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்
நவ.20, கார்த்திகை 4: மகாதேவாஷ்டமி, கால பைரவாஷ்டமி, சிவாலயங்களில் பைரவருக்கு அபிஷேக அலங்காரம், அகோபில மடம் 31வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்
நவ.21, கார்த்திகை 5: சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு, திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்