சிதம்பரம் : ஆதிபராசக்தி மன்றம் சார்பில் நடந்த ரத்ததான முகாமில், சிதம்பரம் அரசு மருத்து வமனையில், 32 பேர் ரத்த தானம் செய்தனர்.சிதம்பரம் அனைத்து ஆதிபராசக்தி மன்றம் சார்பில், மேல்மருவத்துார் பங்காரு அடிகளார் 80வது பிறந்த நாளையொட்டி, ரத்த தான முகாம்சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில்நடந்தது.மன்ற மாவட்ட தலைவர் கிருபானந்தம் முகாமை துவக்கி வைத்தார்.
அரசு ரத்த வங்கி அதிகாரி டாக்டர் அசோக்பாஸ்கர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் ரத்த தானத்தை பெற்றனர். 32 பேர் ரத்த தானம் செய்தனர்.மன்ற நிர்வாகிகள் டாக்டர் அர்ச்சுனன், சங்க ரன், சுப்ரமணியன், செல்வராசு, ஜெயபால், கண்ணன், மகளிர் அணி கலையரசி, பேராசிரியர்கள் ஞானக்குமார், பாலக்குமார்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.