திருப்பூர்: திருப்பூர் பெத்தாமுச்சிபாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில், எம்பெரு மாள் கலைக்குழுவின் அண்ணமார் சுவாமிகள் கதை பாடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. நிகழ்ச்சியில், நாளை 23ல், இரவு, 8:30 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை அண்ணமார் சுவாமிகள் கிளி பிடித்தல், பொன்னர் - சங்கரின் தாய், தந்தையர் உயிர் விடுதல்; கவலையை மறக்க தங்கை அருக்காணி கிளி வேண்டுமென கேட்டல்; அண்ணமார் சுவாமி படை திரட்டிச் சென்று வீரமலை காட்டில் பச்சை கிளி பிடித்து தங்கையிடம் கொடுத்தல்; அண்ணமார் சுவாமிகள் தங்கையிடம் வாழ்த்தி வாள் வாங்குதல்; கருப்புசாமி ஆட்டம் ஆகியன நடைபெற உள்ளதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.