மதுரை : எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று நாவல் பொன்னியின் செல்வன்.இந்நாவலை சென்னை டி.வி.கே.கல்ச்சுரல் அகாடமி நாடகமாக அரங்கேற்றியுள்ளது.
நாவலின் மூலக்கதை சிதையாமல், இயல்பான கதை வசனங்களுடன் நாடகத்துக்கான காட்சி களை எழுதி, இயக்கி இருக்கிறார் மல்லிக்ராஜ். இதை டி.கே.ரமேஷ் தயாரித்துள்ளார். சென்னை, கோவை மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் இந்நாடகம் பல காட்சிகள் நடத்தப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நாளை (நவ., 24) பொன்னியின் செல்வன் நாடகம் பகல் 2:00 மணி, மாலை 6:00 மணிக்கு இரு காட்சிகள் நடக்கிறது. இதற்கான நுழைவுக்கட்டண சீட்டை அரங்கில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு: 94444 14845, www.bookmyshow.com.