பதிவு செய்த நாள்
23
நவ
2019
01:11
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நவாப் ஜாமிஆ பள்ளிவாசலில் மிலாது நபி மாநாடு மற்றும் மக்தப் மதரஸா ஆண்டு விழா, நடந்தது.முத்தவல்லி ஷேக் சேட் தலைமை தாங்கினார். இமாம் முகம் மது யூசுப் பாஜில் மன்பயீ கிராஅத் ஓதினார். செயலர் அன்வர்தீன் வரவேற்றார்.
மாவட்ட ஜாமாத்துல் உலமா சபை தலைவர் சபியுல்லா மன்பயீ தொடக்க உரையாற்றினார். சேலம் நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி பேராசிரியர் முகம்மது அபுதாஹிர் பாக்கவி பாஜில் ஹஜ்ரத் மத நல்லிணக்கமும் சமூக ஒற்றுமையும் என்ற தலைப்பில் பேசினார்.
இதில் செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், சென்னை மதரஸா நிஸ்வான் அரபு கல்லூரி தலைமை ஆசிரியர் அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத், விருத்தாசலம் பள்ளிவாசல் இமாம்கள் பஷீர் அகமது, முகமது உஸ்மான், சையத் இப்ராகிம், வழக்கறிஞர் சித்திக் ஷானவாஸ், கள்ளிப் பாடி, சோழத்தரம், பாளையங்கோட்டை, ஆண்டிமடம் ஆகிய பள்ளி வாசல்களின் முத்த வல்லிகள், இமாம்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் சர்தார் நன்றி கூறினார். ஏற்பாடு களை பள்ளிவாசல் ஜமாத்தார்கள், நூருல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.