பதிவு செய்த நாள்
25
நவ
2019
12:11
புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு பொன்னி அம்மன் கோவிலில் ௧௦ம் மாத ஏக தின லட்சார்ச்சனை விழா நேற்று நடந்தது.
இதனையொட்டி நேற்று காலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம், முதல்கால பூஜை, திருப்புகழ் ஓதுதல், நைவேத்யம், மகாதீபாராதனை நடந்தது. 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கந்தகுரு கவசம் ஓதலை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 2.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4.30 மணிக்கு நான்காம் கால பூஜை, கந்த சஷ்டி கவசம் ஓதுதல் மற்றும் பூக்களால் அர்ச்சனையும், இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது. திருப்புகழ் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன. புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். சகஸ்ரநாம அர்ச்சனையை புதுச்சேரி தமிழ் சங்க பொருளாளர் சீனுமோகன்தாஸ், சூரியநாராயணன், கந்த சஷ்டி கவச பாராயணக் குழு ஆலோசகர் குமரன், ஆலய தனி அதிகாரி சுகுமாறன் துவக்கி வைத்து கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கந்தசஷ்டி கவச பாராயண குழு, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.