கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், ஏகதச ருத்ர ஹோமம் நடந்தது.கார்த்திகை மாதத்தையொட்டி, கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், நேற்று காலை 10:30 மணியளவில் சங்கு மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்து, பாடலீஸ்வரருக்கு கலச அபிேஷகம் நடந்தது. பாடலீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சுவாமிகளுக்கு தங்க கவசம் அணிவித்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி, மாலை 4 மணிக்கு, நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு திரவியங்களால் அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.