பதிவு செய்த நாள்
25
நவ
2019
01:11
திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவில் தேவஸ்தானம் சார்பில், நேற்று வனபோஜன மஹோற்சவம் நடந்தது.திருவள்ளூர், வீரராகவர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கோசாலையில் உள்ள தானப்ப நாயக்கன் மண்டபத்தில், வனபோஜன மஹோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இதையடுத்து, வீரராகவ பெருமாள் அங்கு எழுந்தருளுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று வனபோஜன மஹோற்சவத்தை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவ பெருமாள், வீரராகவர் கோவிலிலிருந்து புறப்பட்டு, கோசாலையில் உள்ள தானப்பன் நாயக்கன் மண்டபத்தில், காலை, 8:30 மணிக்கு எழுந்தருளினார்.பின் காலை, 11:00 மணிக்கு பிரசாத வினியோகமும், தொடர்ந்து, 11:30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை, 3:00 மணிக்கு சேவா காலமும், மாலை, 4:00 மணிக்கு சாற்றுமுறையும், தீர்த்த பிரசாத வினியோகமும் நடந்தன.அதை தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு வீராகவ பெருமாள், கோசாலையில் இருந்து திரும்பி, கோவில் வந்தடைந்தார்.