வத்தலக்குண்டில் புனித தோமையார் சர்ச் பவள விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2019 12:11
வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் புனித தோமையார் சர்ச் பவள விழாவை முன்னிட்டு கொடி யேற்றம் நடந்தது.
வட்டார பங்கு பாதிரியார் சேவியர், அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் அற்புத சாமி, உதவி பங்கு பாதிரியார் தேவசகாயம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி சிறப்பு திருப்பலி நடத்தினார். வத்தலக்குண்டு பங்கை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.