சென்னை: கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சென்னை, தங்கச்சாலை, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் பெருமாளுக்கு, சிவபெருமான் சுதர்சன சக்கரத்தை வழங்குவது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உடன், சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி மற்றும் கன்னியம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.