இப்னு அபிவக்காஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது அவரைக் காணச் சென்றார் நபிகள் நாயகம். இறைத்தூதரே! நோயால் வாடும் எனக்கு அளவுக்கு அதிகமான சொத்து உள்ளது. என் மகள் மட்டுமே வாரிசு. அவளுக்கு என் சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை கொடுக்க நினைக்கிறேன். மீதி இரு பாகத்தை தர்மம் செய்வது சரிதானா? எனக் கேட்டார். அதற்கு நாயகம், சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தை தர்மத்திற்கும், இரண்டு பாகத்தை மகளுக்கும் கொடுங்கள். பிள்ளைகள் நிறைந்த நிலையில் விட்டுச் செல்வது பெற்றோரின் கடமை என்றார்.