பதிவு செய்த நாள்
26
நவ
2019
02:11
* நவ.22, கார்த்திகை 6: ஸ்மார்த்த ஏகாதசி, முகூர்த்த நாள், மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை, சங்கரன் கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல், நெல்லை சிவன், காந்திமதி திருமஞ்சனம், திருவிடை மருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு
* நவ.23, கார்த்திகை 7: வைஷ்ணவ ஏகாதசி, ஆனாய நாயனார் குருபூஜை, திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்ஸவம் ஆரம்பம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி, கும்பகோணம் சக்கரபாணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்களில் திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* நவ.24, கார்த்திகை 8: முகூர்த்த நாள், மாத சிவராத்திரி, பிரதோஷம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 11:29 – பகல் 12:05 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று, திருச்சானூர் பத்மாவதி தாயார் அன்ன வாகனம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, நெல்லை காந்திமதி திருமஞ்சன சேவை, மதுரை இம்மையில் நன்மை தருவார், சிதம்பரம் நடராஜர், அவிநாசி சிவன் கோயில்களில் நந்தீஸ்வரர் பூஜை
* நவ.25, கார்த்திகை 9: திருச்சானூர் பத்மாவதி தாயார் சிம்ம வாகனம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப்பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், நெல்லை சிவன் கொலு தர்பார் காட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு, அவிநாசி லிங்கேஸ்வரர் கார்த்திகை தீபஉற்ஸவம்
* நவ.26, கார்த்திகை 10: அமாவாசை விரதம், திருச்சானூர் பத்மாவதி தாயார் சிறிய திருவடி சேவை, சுவாமி மலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோயில் ஆண்டாள் திருமஞ்சனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காட்டியருளல், கரிநாள்
* நவ.27, கார்த்திகை 11: கோடி கன்னிகா தானம், தாதாச்சாரியார் திருநட்சத்திரம், திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜவாகனம்
* நவ.28, கார்த்திகை 12: சந்திர தரிசனம், மூர்க்க நாயனார் குருபூஜை, சுவாமி மலை முருகன் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம்