Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயப்பன் ரதத்திற்கு பக்தர்கள் ... காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவிலில் யாகசாலை துவக்கம் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா: துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா:  துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடக்கம்

பதிவு செய்த நாள்

29 நவ
2019
10:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா துர்க்கையம்மன் உற்சவத்துடன் நேற்று துவங்கியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வரும், 1ல், கொடியேற்றமும், 10 அதிகாலை, 4:00 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலைஉச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். இதைக்காண, பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். விழாவை காண வரும் பக்தர்கள், பாதுகாப்புடன் வந்து செல்லவும், விழா இனிதே நடக்க வேண்டியும், நகர காவல் தெய்வமான துர்க்கைஅம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, துர்க்கையம்மனுக்கு நேற்று மாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், 7:00 மணிக்கு அலங்கார மண்டபத்தில், துர்க்கையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், காமதேனு வாகனத்தில், வண்ண மலர்களால் துர்க்கையம்மன் அலங்கரிக்கப்பட்டு, அதிர்வேட்டுகள் முழங்க, மேளதாளத்துடன், மாட வீதி உலா வந்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்த நிலையில் இன்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 
temple news
ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கடந்த 2005-ல் முதலாவது பிரதிஷ்டை தின விழா நடந்தது.21வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar