திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிச.,2ல் காலை 9:45 முதல் 10:15 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நாட்களில் சுவாமி தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருளுவார். டிச.,9 பட்டாபிஷேகம், டிச.,10 காலையில் தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படும். டிச., 11ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.