பதிவு செய்த நாள்
02
டிச
2019
02:12
திருவொற்றியூர் : தியாகராஜர் கோவில், ஆதிசேஷ தீர்த்த குளத்தில், கழிவுநீர் கலப்பதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கோவிலின் உள்ளே, பிரம்ம தீர்த்த குளமும், வெளியே ஆதிசேஷ தீர்த்த குளமும் உள்ளன. வெளி குளத்திற்கு செல்லும் வடிகால்கள் பராமரிப்பின்றி உள்ளதால், குளத்திற்கு மழைநீர் சரிவர செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனால், சமீபத்தில் வடிகால்கள் சீரமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.இந்நிலையில், தேரடி, சன்னதி தெரு, மாட வீதிகளில் உள்ள வடிகால்களில், குடியிருப்புகளின் கழிவுநீர் தொட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதால், குளத் தில் கழிவுநீர் கலக்கிறது.இதனால், புனிதமான ஆதிசேஷ தீர்த்த குளம் கடும் துர்நாற்றத்துடன், கழிவுநீர் தேங்கும் குட்டையாக காட்சி அளிக்கிறது.
’கோவில் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, முறைகேடாக இணைக்கப் பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை, துண்டிக்க வேண்டும்; குளத்தின் புனிதத்தை காக்க வேண்டும்’ என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.