மேலுார்: மேலுாரில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சி அம்மன் கோயிலில் மழை நீர் ஒழுகுவதால் பக்தர்கள் வேதனைபடுகின்றனர். இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 19 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. கோயில் முழுவதும் சிதிலமடைந்துள்ளது. மழைநீர் கருவறையில் உள்ள சுவாமி சிலை மீதும், பக்தர்கள் மீதும் விழுகிறது. ராஜகோபுரத்தின் ஒருபகுதி சேதம் அடைந்துள்ளது. நிர்வாக அலுவலர் பாலசரவணன் கூறுகையில், “திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு பணி துவங்கும்” என்றார்.