பதிவு செய்த நாள்
03
டிச
2019
02:12
கிருஷ்ணகிரி: பர்கூர்- வாணியம்பாடி சாலையில் உள்ள குண்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று (டிசம்., 2ல்)நடந்தது. இதையொட்டி, கடந்த மாதம், 30 காலை, 8:30 மணிக்கு, முதற்கால பூஜை, விநாயகர் வழிபாடு நடந்தது. கடந்த, 1 காலை, இரண்டாம் கால பூஜை, மதியம் பர்கூர் காமாட்சியம்மன் கோவிலில் இருந்து மங்கள இசை, பம்பை, கேரளா செண்ட மேளம், வாணவேடிக்கை முழங்க, பெண்கள் முளைப்பாலிகையை ஊர்வலமாக கொண்டு வந்தனர். நேற்று (டிசம்., 2ல்) காலை, நான்காம் காலயாக பூஜையும், கோபுர கலசங் களுக்கு புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகமும் நடந்தது. குண்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த பன்னஹள்ளி செல்வ கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா, நேற்று (டிசம்., 2ல்) நடந்தது. இதையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு, சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. 8:00 மணிக்கு மேல், இக்கோவில் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.