பதிவு செய்த நாள்
03
டிச
2019
02:12
தர்மபுரி: எட்டிமரத்துப்பட்டியில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத விஸ்வநாதர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தர்மபுரி அடுத்த, எட்டிமரத்துப்பட்டி யில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத விஸ்வநாதர் மற்றும் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 30ல் கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று (டிசம்., 2ல்) காலை, 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திரவிய ஹோமம், அஸ்திர ஹோமம் நடந்தன. காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், இக்கோவில் கோபுரம் மற்றும் மூலவர்களுக்கான கும்பாபிஷேகம் நடந்தது.
பாலசுப்பிரமணி, மணிகண்டன் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், விசாலாட்சியம்மன், விஸ்வநாதர், சக்திமாரியம்மன் பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். காலை, 8:00 மணிக்கு மேல், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் எட்டிமரத்துப்பட்டி ஊர்மக்கள் செய்திருந்தனர்.