கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு, அதுவும் ராகு காலத்தில் செய்வது சிறந்தது. ராகு காலத்திலும் கடைசி அரை மணி நேரமான அமிர்த கடிகை நேரமும் சிற ப்பான பரிகார நேரம். நெய் விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். (எலுமிச்சை விளக்கு அல்ல, அகலில் நெய்தீபம் ஏற்றுவது) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிரார்த்தனைகள் நிறை வேறும். வெள்ளிக்கிழமை காலை 10.30 -12 ராகு காலத்தில், துர்க்கைக்கு தாமரைத் தண்டு திரி போட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்.