பதிவு செய்த நாள்
04
டிச
2019
12:12
பகவானின் திருமேனியில் அனைத்தையும் கண்டான் அர்ஜுனன். அதுவே பகவானின் விராட் ஸ்வரூபம் எனப்படுகிறது.
விராட் புருஷனென்னும் ரூபத்திலிருக்கும் பகவானுக்கு பாதாள லோகமே பாதமாகவும், ரசாதலமே புறங்கால்களாகவும், மகாதலமே பாதங்களின் இருபக்கமாகவும், தலாதலம் கணைக்கால்களாகவும், சுதலம் முழங்கால் களாகவும், விதலம், அதலம் ஆகிய லோக ங்கள் இரு தொடைகளாகவும், பூலோகம் மத்தியப் பகுதியாகவும், ஆகாசம் நாபிய õகவும், சொர்க்கலோகம் மார்பாகவும் மஹர்லோகம் கழுத்தாகவும், ஜனலோகம் முகமாகவும் தபோலோகம் நெற்றியாகவும், சத்திய லோகம் சிரசாகவும் இருக்கின்றது.
இவை மட்டுமன்றி அநேக சிரசினைக் கொண்ட விராட் புருஷனுக்கு இந்திரன் முதலான தேவர்களே கைகளாகவும், எட்டுத் திக்குகளே காதுகளாகவும் இருக்கின்றன. அச்வினி தேவர்கள் மூக்குகளாகவும், ஜ்வலிக்கும் அக்னியே அவருடைய முகத்தின் பொலி வாகவும், சூரிய சந்திரர்களே கண்களாகவும், இரவும் பகலுமே இமைகளாகவும், வருண னே முகவாய்க்கட்டையாகவும், நவரசங்களே நாக்காவும், காலதேச வர்த்தமான ங்களுக்கு அப்பாற்பட்ட அந்த பரம புருஷ பகவானின் சிரசில் வேதங்களே கீரிடமாகவும், யமனே அவருடைய சிங்கப் பற்களாகவும் இருக்கிறது.
ஜீவராசிகளை மோகத்தில் ஆழ்த்தும் மாயையே அவருடைய வசீகரமான சிரிப்பாகவும், அவருடைய கடைக்கண் பார்வையே இந்த பிரபஞ்சத்தின் சிருஷ்டியாகவும், தர்மமார்க்கம் அவருடைய ஸ்தனங்களாகவும், அதர்மமார்க்கம் அவருடைய பின்பக்கமாகவும், மஹாசமுத்திரங்கள் அவருடைய வயிற்றிலும், மலைகள் அவருடைய எலும்புகளாகவும், கங்கை முதலிய ஜீவநதிகள் அவருடைய நாடி நரம்புகளாகவும், மர ங்கள் ரோமங்களாகவும், வாயுபகவானே அவருக்கு மூச்சாகவும், பருவ காலங்களே அவருடைய நடையாகவும், மேகங்களே தலைமுடியாகவும், சந்தியா காலங்களே அந்த பரமபுருஷனுக்கு ஆடையாகவும் இருக்கின்றன.