ஆலமரத்தில் விழுதுகள் இருப்பது இயற்கை. இரட்டை பனை மரங்கள் இருப்பது ஆச்சரியம். ஆனால், ஒரே இடத்தில் இரட்டை பனைமரமும், ஆலமரமும் ஒன்றையொன்று பிணைந்திருப்பது அபூர்வமல்லவா? இந்த அபூர்வ பிணைப்பை அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் முன்பு காணலாம்.