நட்சத்திரங்களில் திருவோணம் விஷ்ணுவுக்கும், திருவாதிரை சிவபெருமானுக்கும் உரிய நட்சத்திரங்கள் ஆகும். வானிலை ஆராய்ச்சியாளர்கள் திருவாதிரை எரி நட்சத்திரம் என்றும், திருவோணம் குளிர்ச்சியான நட்சத்திரம் என்றும் நிரூபித்திருக்கிறார்கள். ஜோதிப்பிழம்பான சிவனுக்கு குளிர்ச்சி பொருந்திய வில்வத்தையும், அதிக குளிர்ச்சியில் இருக்கும் மஹாவிஷ்ணுவுக்கு வெப்பத்தைத் தரும் துளசியையும் பூஜைக்குரிய பொரு ளாகச் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.