திருமணம், புதுமனை புகுதல் என குடும்பத்தில் சுபநிகழ்வுகளை ஆடம்பரமாக நடத்த நினைக்கிறோம். காரணம் அப்போது தான் மற்றவர் மதிப்பார்கள் என்பது நம் எண்ணம். ஆனால் ஆண்டவரோ ஆடம்பரத்தை ஏற்பதில்லை. ஊரே பண்டிகை கொண்டாடும் நேரத்தில் கூட இயேசு பெதஸ்தா குளத்தருகே நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தார். விழாக்கள் நடத்துவதே ஏழைகளுக்கு உதவவே. கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற நாட்களில் எத்தனை ஏழைகளுக்கு உதவினோம் என எண்ணிப் பார்க்க வேண்டும். அது போல இல்ல விழாக்களில் விருந்து சாப்பிட்டவர்களில் எத்தனை ஏழைகள் இருந்தனர் என சற்று சிந்தியுங்கள். ஆடம்பர நோக்கில் பணத்தை வீணாக்காமல் ஏழை, அநாதை, நோயாளிகளின் துன்பம் தீர உதவுங்கள்.