பெரியாண்டிச்சி அம்மன் சிலை: திருமுருகன்பூண்டியில் வடிவமைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2019 02:12
அவிநாசி:திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் சிலை, மேட்டூர் கொண்டு செல்லப்பட்டது.
திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டியில் உள்ள சிற்ப கலைஞர்கள், கடவுள்கள் உள்ளிட்ட பல்வேறு சிலைகளை செதுக்குவதில் வல்வர்களாக உள்ளனர். அங்குள்ள, வீரமணி என்ப வரது, சிற்பக் கூடத்தில், சிறப்பு பெற்ற பெரியாண்டிச்சி அம்மன் சிலை தயாரிப்பு பணி கடந்த இரு ஆண்டாக நடந்தது.
இச்சிலை செதுக்கும் பணி முடிந்து, மேட்டூர் அடுத்த நங்கவள்ளி என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.சிற்பி வீரமணி கூறுகையில்,”கடந்த ஓராண்டாக சிலை செதுக்கும் பணியில் வேகம் கூட்டினாம். ஒரே கல்லில், 18 அடி நீளம், ஏழு அடி உயரத்தில் சிலை செதுக்கியுள்ளோம். 20 டன் எடை இருக்கும். இச்சிலை, இரு நாளுக்கு முன்,மேட்டூர் நங்கவள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது,” என்றார்.