ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் குளங்கள் நிரம்பியதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு வனப்பகுதியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மம்சாபுரத்திலுள்ள வாழைகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் விழுந்ததால் ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டு நிரம்பும் தருவாயை எட்டியது.அங்கிருந்து வைத்தியநாதசுவாமி கோயிலில் உள்ள, சிவ கங்கை மற்றும் தாமரை தெப்பங்களுக்கு தண்ணீர் திருப்பிவிடபட்டு தற்போது குளங்கள் நிரம்பியுள்ளது. இதனால் சிவ பக்தர்களும், உள்ளூர் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள் ளனர். தாமரைகுளம் முழு அளவை எட்டியதும் அங்கிருந்து வயல்வெளியில் செல்லும் தண்ணீரை, திருப்பாற்கடலுக்கு செல்லும்படி திருப்ப அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் நகரின் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.