கடலுார் திருமாணிக்குழி கோவிலில் 10ம் தேதி திருத்தேர் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2019 12:12
கடலுார்:திருமாணிக்குழி அம்புஜாஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவிலில் வரும் 10ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.இது குறித்து செயல் அலுவலர் மதனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலுார் அடுத்த திருமாணிக்குழி அம்புஜாஷி உடனுறை வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த் திகை பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கியது.
கடந்த 3ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது. இரவு 7 மணிக்கு பஞ்சமூர் த்திகள் வாகனத்தில் புறப்பாடு நடந்தது.வரும் 10ம் தேதி திருத்தேர்விழாவும், 11ம் தேதி மலைமீது ரோகிணி தீப உற்சவமும் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் திருக்கோவிலுக்கு எதிரே உள்ள மலையில் தீபம் ஏற்றப்படும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.