பதிவு செய்த நாள்
06
டிச
2019
12:12
கடலுார்:- சிதம்பரம் பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் எனும் ஆகாச சாஸ்தா கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் வரும் 8ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு, இன்று காலை ( 6ம் தேதி) 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால பூஜைகள் நடக்கிறது. நாளை (டிச., 7ல்) காலை 8:30 மணி க்கு விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால பூஜை நடக்கிறது. வரும் 8ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தத்வார்ச்னை, மூலமந்தர ஹோமம், 10:00 மணிக்கு பரிவார யாக சாலை பூர்ணாகுதி, 11:05 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 11:20 மணிக்கு கும்பாபிஷேகம், 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.