பதிவு செய்த நாள்
06
டிச
2019
12:12
சென்னிமலை: சென்னிமலை அருகேயுள்ள எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, கடந்த மாதம், 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் 4ல் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், நேற்று (டிசம்., 5ல்) காலை நடந்தது. அண்ணாமலை பாளையம், புதுவலசு, நொய்யல், பாரவலசு, திட்டுப்பாறை, தாமரைக்காட்டுவலசு மற்றும் சுற்றுவட்டார மக்கள், பொங்கல் வைத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் அம்மனை வழிபட் டனர். இரவில் கம்பம் நொய்யல் ஆற்றில் விடப்பட்டது.