தேவதானப்பட்டி அருகே மருதகாளியம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2019 12:12
தேவதானப்பட்டி:குள்ளப்புரத்தில் மருதகாளியம்மன் கோயில் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் கார்த்திகை மாத திருவிழா நடைபெற்றது. அம்மன் வீதி உலா வந்த போது, பொதுமக்கள் வாழைப்பழங்களை சூறை இட்டு நேர்த்திக்கடன் செலுத் தினர். இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பொங்கல் வைத்து கிடா வெட்டப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.