பதிவு செய்த நாள்
07
டிச
2019
02:12
சென்னை:’தருமபுரம், 26வது ஆதீனத்தின் இறைப்பணியை, ஆன்மிக சமுதாயத்தினர் என்றும் மறக்க மாட்டார்கள்’ என, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
தருமபுரம் ஆதீனத்தின், 26வது மடாதிபதி, சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், 4ம் தேதி ஸித்தி அடைந்தார். இது தொடர்பாக, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியிருப்பதாவது:தருமபுரம், 26வது குருமகா சன்னிதானம், காஞ்சி மடத்துடன், மூன்று தலைமுறைகளாக நெருங்கிய தொடர்பு உடையவர். தமிழ் உலகிற்கும், சைவ சமயத் திற்கும், பொதுவாக பாரம்பரியத்திற்கும் பேருதவி புரிந்தவர்.
திருக்கோவில்களின் முன்னேற்றத்தில், சிறப்பு கவனம் செலுத்தியவர். பல தேவஸ்தானங் களையும் திறம்பட நிர்வகித்து, கும்பாபிஷேகம் செய்து, பூஜைகள் சரிவர நடக்க வழி வகுத்தவர். ஆன்மிக சமுதாயமும், அன்பர்களும், அவரது இறைப்பணியை என்றும் மறக்க மாட்டார்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.