பதிவு செய்த நாள்
08
டிச
2019
03:12
பேரூர்;பூண்டி வெள்ளியங்கிரி கோவில் மலை உச்சியில், கார்க்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில், பூண்டி வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மலை உச்சியில் வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க, பிப்., முதல், மே வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இத்துடன், கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபடுவதும் வழக்கம். கடந்த ஆண்டு, தீபம் ஏற்றி வழிபட வனத்துறை அனுமதி மறுத்தது. இதையடுத்து, வெள்ளியங்கிரி மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.இந்நிலையில், தீபம் ஏற்ற அனுமதி கோரிய வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதாக, பூண்டி வெள்ளியங்கிரி கோவில் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.