உடுமலை:உடுமலை திருப்பதி வேங்கடேசா பெருமாள் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசா பெருமாள் கோவிலில், நேற்றுமுன்தினம் காலை, உலக நலன் வேண்டி, தனம், தானியம், வேளாண்மை, வியாபார வளர்ச்சிக்காக ஸ்ரீயாகம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ேஹாமம், ஸ்ரீ தன்வந்திரி ேஹாமம், ஸ்ரீ லட்சுமி காயத்திரி ேஹாமம் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். தொடர்ந்து ஸ்ரீ வேங்கடேசா சரணாஹதி பூஜை நடந்தது. இதில், ஸ்ரீவில்லிப்புத்துார் 24வது பட்டம் ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.