தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை தித்திக்க வைக்கும் தீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2019 03:12
விருதுநகர்: கார்த்திகை என்றதுமே கார்த்திகை தீப விழா தான் நம் நினைவில் வரும். இவ்விழா மிக அதிகமாகக் கொண்டாடப்படுவது தமிழ்நாட்டில்தான்.
சொல்ல போனால் தீபாவளி, நவராத்திரி பண்டிகைகளை தமிழர்கள் கொண்டாட துவங்கும் முன்னதாகவே கார்த்திகை திருவிழா கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. இதை அகநானுாறு பாடல்களில் காண முடிகிறது. கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவதுதான் திருகார்த்திகை விழா. கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீப ஒளி என்றாலே தீமைகளை அகற்றுவது என்ற பொருளும் கூறப்படுகிறது. தீபம் என்பது அக்னி . அக்னி தான் நமது வேண்டுதல்களையும், நாம் கடவுளுக்கு அளிக்கும்
காணிக்கைகளையும் கடவுளிடம் கொண்டு சேர்க்கிறது. அக்னி கடவுள் ஞானத்தினை அளிப்பது. அக்னி இல்லாமல் வேத சம்பிரதாயங்களே இல்லை. தீபம் ஒருவரின் கடவுள் நம்பிக்கையை மேலும் உறுதியாக்கி ஆன்மிக பாதையில் அழைத்து செல்லும். தீப திருநாளில் மட்டுமல்ல தினமும் அகல் விளக்கேற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். இதையொட்டிய விருதுநகர் - சிவகாசி செல்லும் நான்குவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் உள்ள பத்மகரி பானை கடையில் தீப விளக்குகளை ரகம், ரகமாக விற்பனைக்கு வைத்துள்ளனர் .