பதிவு செய்த நாள்
09
டிச
2019
03:12
திருப்போரூர்:தண்டலம் அய்யப்பன் கோவிலில், 23ம் ஆண்டு விளக்கு பூஜை நடந்தது.
திருப்போரூர் அடுத்த, தண்டலம் கிராமம், செங்கல்பட்டு சாலை ஒட்டியவாறு அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், விளக்கு பூஜை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் (டிசம்., 7ல்), 23ம் ஆண்டு, விளக்கு பூஜை நடந்தது.அதை தொடர் ந்து, மலர் அலங்காரத்தில், சுவாமி வீதி உலா புறப்பாடு நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் வீதி உலாவில் விளக்குகள் எடுத்துக் கொண்டு செங்கல்பட்டு சாலை, திருப்போரூர் மாடவீதி, மேட்டுத்தண்டலம் பிரதான சாலை வழியாக கோவில் வந்தடைந்தனர்.முன்னதாக, கணபதி பூஜை, அய்யப்பன் பூஜை, மகா அபிஷேகம் நடந்தது.