காஞ்சிபுரம்:கச்சபேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கடை ஞாயிறு திருவிழாவை முன்னிட்டு, நேற்று (டிசம்., 8ல்), ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கடை ஞாயிறு திருவிழா விமர்சையாக நடைபெறும்.கடந்த மாதம் இவ்விழா துவங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று (டிசம்., 8ல்), நான்காவது வாரம், மழை இல்லாததால், வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. அடுத்த வாரத்துடன் கடை ஞாயிறு திருவிழா நிறைவு பெறுகிறது. பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.