பதிவு செய்த நாள்
09
டிச
2019
03:12
திருவொற்றியூர்:திருவொற்றியூர், காட்டுப் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வெகு விமரிசையாக நடந்தது.
திருவொற்றியூர் மேற்கு, பொன்னியம்மன் நகரில், அரை நுாற்றாண்டு பழமை வாய்ந்த, காட்டுப் பொன்னியம்மன் கோவில் உள்ளது. ஊர் பொது மக்கள் அளித்த நன்கொடையால், கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று (டிசம்., 8ல்) கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 6ம் தேதி முதல், யாகசாலை பூஜைகள், விசேஷ பிரார்த்தனை, ஹோமங்கள் உள்ளிட்டவை நடந்தன.நேற்று (டிசம்., 8ல்) காலை, விக்னேஸ்வர பிரார்த்தனை, நான்காம் கால யாக பூஜைகள், நாடிச்சந்தானம் போன்றவை நடைபெற்றன.
பின், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு வேள்விகள் நடந்தன. மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, மங்கல வாத்தியம், வேத மந்திரங்கள் முழங்க, கலசங்கள் புறப்பாடாகின.அம்மன் சன்னிதி கோபுரம், ராஜகோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர் ந்து, காட்டு பொன்னியம்மன் உள்ளிட்ட பரிவாரமூர்த்திகளுக்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.