சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் பாலமுருகன்கோயில் கும்பாபிஷேகம்நடந்தது. டிச.,7ல் கணபதி ஹோமம் துவங்கியது. நேற்று டிச.,8 காலை இரண் டாம் கால பூஜையை தொடர்ந்து சிவாச்சாரியார்ராமசுப்ரமணியன் தலைமையில் கும்பாபி ஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் இல்லத்து பிள்ளைமார் உறவின் முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.
மேலுார்: வெள்ளநாதன்பட்டி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு டிச.,7 முதல் யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று (டிசம்., 8ல்) சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொட்டகுடியில் நந்தி பெருமாள் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் சிவாச்சாரியார் செல்வக் குமார் தலைமையில் நடந்தது.