குன்னூர் : அருவங்காடு அருகே கோபாலபுரத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் ஆண்டு விழா மற்றும் மாரியம்மன் கரக உற்சவம் உற்சாகமாய் துவங்கியது. நேற்று மாலை 6.00 மணிக்கு சித்தி விநாயகருக்கு அபிஷேகம், தீபாரானை நடத்தப்பட்டன. இரவு 8.00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இன்று மாலை 7.00 மணிக்கு இன்னிசை கச்சேரி நடத்தப்படுகிறது. நாளை காலை 6.00 மணிக்கு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை அலங்கரித்து அழைத்து வரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மதியம் 2.00 மணிக்கு அன்னதானம், கஞ்சி வார்ப்பு வழங்கப்படுகிறது. மாலை 6.00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது. பின் மேள தாளம் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன், அம்மன் கரக ஊர்வலம் நடத்தப்படுகிறது. விழாவையொட்டி, கோபாலபுரம், எம்.ஜி.காலனி பகுதிகள் களைகட்டியுள்ளன; கொடி, தோரணங்களால் வீதிகள் அழகுப்படுத்தப்பட்டுள்ளன; ஆங்காங்கே வண்ண விளக்கு அலங்காரமும் கண்ணை கவர்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழு மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.