ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏப்., 25ம் தேதி பொங்கல் விழா நடக்கிறது. ஈரோடு கருங்கல்பாளையம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏப்., 17ம் தேதி இரவு , 8.30க்கு பூச்சாட்டுடன், பொங்கல் விழா துவங்கியது. ஏப்ரல் 22ம் தேதி காலை 6 மணிக்கு, காவிரியில் தீர்த்தம் எடுத்து செல்லுதல், 23ம் தேதி காலை 8 மணிக்கு மகளிர் அணி சார்பில் சிறப்பு அபிஷேகமும், 24ம் தேதி காலை 7 மணிக்கு பால் அபிஷேகமும் நடக்கிறது. 25ம் தேதி காலை 6 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. இதில் கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம், மாதவன்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டி நடக்கிறது. 26ம் தேதி மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.