க.பரமத்தி: நடந்தை கன்னிமார் மற்றும் கருப்பண்ண ஸ்வாமி கோவிலில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. க.பரமத்தி பஞ்சாயத்து யூனியனில் பிரசித்தி பெற்ற கன்னிமார், கருப்பண்ண ஸ்வாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நேற்று மாலை பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மே 1 ம் தேதி வரை நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. 2 ம் தேதி ஸ்வாமி ஊர்வலம், 4 ம் தேதி புனித தீர்த்தம் கொண்டு வர கொடுமுடி செல்லுதல், 5 ம் தேதி பொங்கல் வைத்தல், 6 ம் தேதி காலை 6 மணிக்கு கிடா வெட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7 ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.