திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2019 04:12
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரணீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மாலை 5:30 மணியளவில் கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 6:00 மணியளவில், கோவிலுக்கு எதிரில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதன் பின்னர் திந்திரிணீஸ்வரர் கோவில் ராஜ கோபுர உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது.