காரைக்கால்: காரைக்காலில் ஆயிர வைசிய ஐயப்ப பக்தர்கள் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.காரைக்கால், மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள ராமலிங்க சுவாமிகள் மடத்தில் ஆயிர வைசியர் மஞ்சப்புத்தூர் சங்கம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இணைந்து 46ம் ஆண்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை விழா நடந்தது.முன்னதாக ஐயப்ப சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.