அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் உற்சவ அம்மன் திருவண்ணாமலை தீப தரிசனம் நடந்தது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. திருவண்ணாமலை தீப தரிசனத்தைக் காணும் வகையில் நேற்று மாலை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்சவர் சிலை கோவில் வளாகத்திற்கு வெளியே தென் மேற்கு மூலையில் வைக்கப்பட்டது. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், இங்கு உற்சவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. மேலும், கோவில் உட்பிரகாரத்தில் லட்ச தீபம் ஏற்பட்டது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.