பதிவு செய்த நாள்
11
டிச
2019
04:12
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில், சன்னிதி தெருவில் உள்ள நம்பிள்ளை சன்னிதியில், யதோக்தகாரி பெருமாள், நேற்று எழுந்தருளினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சன்னிதி தெருவில், நாலாயிர திவ்ய பிரபந்தம் நுாலுக்கு, விளக்க உரை எழுதிய நம்பிள்ளை, வடக்கு திருவீதிபிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. சன்னிதிகள் கட்டி, 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 10 நாட்களாக உற்சவம் நடந்து வருகிறது. முதல் நாள், பாண்டவ துாதப் பெருமாள் இக்கோவிலில் எழுந்தருளி னார். கடைசி நாளான நேற்று காலை, 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்று விளங்கும், யதோக்தகாரி பெருமாள், கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு மாட வீதி வலம் வந்து, நம்பிள்ளை சன்னிதியில் எழுந்தருளினார்.இங்கு, பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.பின், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி முடிந்ததும், பக்தர்கள்அனைவருக்கும், தீர்த்தம் வழங்கப்பட்டது. மதியம் யதோக்தகாரி பெருமாள், கோவிலை மீண்டும் சென்றடைந்தார்.