பதிவு செய்த நாள்
11
டிச
2019
04:12
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, காலை, 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் அம்மன் உட்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதே போல், திருத்தணியில், தணிகாசலம்மன், பரமேஸ்வரி அம்மன், கங்கையம்மன், படவேட்டம்மன் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.