பதிவு செய்த நாள்
12
டிச
2019
11:12
திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில், கார்த்திகை பவுர்ணமி விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் கிரிவலப்பாதையில், திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாத பிறப்பு, பவுர்ணமி, விசாகம், சஷ்டி மற்றும் பிரதோஷ நாட்களில், கிரிவலம் வருவோர் அம்மனை வழிபட்டு செல்வர். நேற்று, கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி, மூலவர் சொக்கம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால் மகா அபிஷேகம், தீப துாப ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பட்டுப்புடவை உடுத்தி, சிறப்பு அலங்காரத்தில், மூலவர் சொக்கம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் செய்திருத்தார்.