பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் நடந்த பாபாஜியின் 1816ம்ஆண்டு பிறந்த நாள் விழாவில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை, சுங்க அலுவலகம் அருகே பாபாஜி கோவில் உள்ளது. பாபாஜி கி.பி., 203ம் ஆண்டு கார்த்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, பாபாஜியின் 1816ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று கோவில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பாபாஜிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு கிரியா யோகயாகம் துவங்கி, இன்று (12ம் தேதி) அதிகாலை 3:00 மணி வரை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி த ரிசனம் செய்தனர்.