பதிவு செய்த நாள்
12
டிச
2019
11:12
திருமங்கலம், திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையம் சத்ய யுக சிருஷ்டி கோயில் வளாகத்திலுள்ள ஆண்டாள், ராமானுஜர் உள்ளிட்ட கோயில்களில் 3வது கட்ட மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த வளாகத்தில் 127 கோவில்கள் மற்றும் 272 சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஒவ்வொரு கோயிலாக 7 கட்ட கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நேற்று 3ம்கட்டமாக காலை 6:45 முதல் 7:31 மணிக்குள் ஆண்டாள், ராமானுஜர், ராகவேந்திரர், அனுமான், சைதன்ய மகாபிரபு, பக்த மீரா, அரிச்சந்திரன் மற்றும் துவாரபாலகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அமைக்கப்பட்ட கோயில்களிலும், காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் சீதாராமர், லட்சுமணர், ராதாகிருஷ்ணர், ரகுமாயி சமேத பாண்டுரங்கன் மூலவிக்ரகங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை தெற்குகிருஷ்ணன் கோயில் தலைமை அர்ச்சகர் விஜயராகவ பட்டாச்சார்யார் கும்பாபிஷேகத்தை நடத்தினார். முக்தி நிலையம் தலைவர் வசந்தசாய் முன்னிலை வகித்தார். இமயமலை சுவாமி யோகானந் தலைமை வகித்தார். நிர்வாக அறங்காவலர் வெங்கட்ராமன் ஏற்பாடுகளை செய்தார். பரஞ்ஜோதி ஆசிரமம் தலைவர் திருமலை மற்றும் பலர் பங்கேற்றனர்.