வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று கார்த்திகை தீப விழா நடந்தது. திருமஞ்சனம், மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பாடாகி சன்னதி வீதி வழியே தேரடி வந்தார். அங்கு ஏராளமான பக்தர்கள் மத்தியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏற்பாட்டினை மண்டகப்படிதாரர் ஜே.சி.சேகர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
வடமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலிலும் கார்த்திகை தீப விழா நடந்தது. வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருமஞ்சன வழிபாடும், மகாதீபத்தை தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பாலமுருகன் கோயில்,தென்னம்பட்டி சவடம்மன் மலைக்கோயிலிலும் கார்த்திகை தீப விழா நடந்தது.